இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GST வரியும் CAG அறிக்கையும்

இரமணன் எல் ஐ சி அதிகாரி  மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான கயிறு இழுக்கும் போட்டியின் பின் புலத்தில் சி.ஏ.ஜி அறிக்கை கூடுதல் அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளதே! மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் நடப்பதை கயிறு இழுப்பு போட்டி என்று சொல்ல முடியாது. போட்டியெனில் இரு பக்கத்திற்கும் சம நிலை இருப்பது போட்டியின் விதிகளில் உறுதி செய்யப்படும். ஆனால் இதுவோ *பாதாளத்திற்குள் தள்ளி விடப்பட்ட மாநிலங்கள் ஏதோ கிடைக்கிற கயிறைப் பிடித்து தத்தளித்து மேலே ஏற முனைகிற நிலை.* மத்திய அரசால் காப்பாற்றுவதற்காக என்று கூறி வீசப்படுகிற கயிறு பலவீனமாய் இருப்பதே கூடுதல் ஆபத்து. இப்போது விசயத்திற்கு வருவோம். நெருக்கடியை மாநிலங்கள் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் மத்திய அரசின் போக்கை தனியாக நாம் விவாதிக்க வேண்டும். இங்கு அடிப்படை முறைமையிலேயே உள்ள ஓர வஞ்சனை, அசமத்துவத்தை பகிர்ந்து கொள்ளலாம். சி.ஏ.ஜி அறிக்கையும் இந்த உள்ளார்ந்த பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்துள்ளது.  2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி திட்டம் தொடக்கத்திலிருந்தே  பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியது. அத்தியாவசிய பண...

வருமான வரிக் கணக்கு தாக்கலில் இனி கவனம் அவசியம்

படம்
வரிக் கணக்கு தாக்கலில் இனி கவனம் அவசியம்! - *முகமறியா மதிப்பீடு..!* பி.பி.எஃப் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரிலும் செலுத்தலாம். ஆனால், மனைவி சம்பாதிப்பவராக இருக்கக்கூடாது. பிரீமியம் ஸ்டோரி நம்மில் சிலர் நினைப்பதுபோல, முகமறியா வருமான வரி மதிப்பீடு என்பது ‘புதிய பானையில் பழைய சோறு’ அல்ல... வரி செலுத்துவதிலிருந்து ஒருவர்கூட இனி தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக இந்தப் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. விளைவு, இனி வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் நாம் கவனமாக இல்லாவிட்டால், வரி ஏய்ப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கும். முகமறியா மதிப்பீடு என்ற இந்தப் புதியமுறையை மத்திய அரசாங்கம் இப்போது ஏன் கொண்டுவந்துள்ளது என்ற காரணத்தை நாம் புரிந்துகொண்டால், இதன் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர முடியும். வரிக் கணக்கு தாக்கலில் இனி கவனம் அவசியம்! - முகமறியா மதிப்பீடு..! கடந்துவந்த பாதை! ‘நியாயமாகச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துங்கள்’ என வருமான வரித்துறை தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துப் பார்த்தது. ஆனால், யாரும் அதைக் கேட்கிற மாதிரி இல்லை. விளைவு, கடந்த ஆகஸ்ட் 14, 2020 முதல் முகமறியா மத...

"தாண்டிச் செல்கின்ற தகுதி"

படம்
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ "தாண்டிச் செல்கின்ற தகுதி" ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை.  தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது.    அதாவது பயம் நமக்கு அதைத் * தாண்டிச் செல்கின்ற தகுதியை * உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது. எது குறித்தும் பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டாள் வெற்றி நிச்சயம்

கொரோனா நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும்...

படம்
. - கொரோனா நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும் ஊரடங்கில் இருந்து வெளியே வந்து களப்பணிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டோம் துருப்பிடித்துப்போன நம் வாகனத்திலிருந்து ஆளும்வர்கத்தின் மூளை வரை அனைத்தையும் துாய்மைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீண்ட பிரிவிற்கு பிறகு கைகொடுத்து கட்டி அனைத்து கண்ணீர் பெருக்கி அன்பை பெருக்கிக்கொள்ளும் பழைய நடைமுறைக்கு இன்னும் பல மாதங்கள் தடா போடுங்கள் காரணம் இன்னும் கொரோனா நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை ஆகவே என்னிடமிருந்து உனக்கோ? உன்னிடம் இருந்து எனக்கோ? நம்மிடம் இருந்து நம் குடும்பத்தினருக்கோ? கொரோனாவை கொடுத்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனமும் தெளிவும் தேவை. மின்சாரம் புழங்கும் இடத்தில் எலும்புக்கூடு படம் போட்டு தொடாதே அபாயம் என்று எழுதியிருப்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு எதையும் யாரையும் தொடாமல் இருங்கள் தவிர்க்கமுடியாமல் தொடவேண்டி வந்தால் உடனே சோப்பு போட்டு நன்றாக கைகழுவி விடுங்கள். முகக்கவசம் இப்போது நம் உயிர்கவசமாகிவிட்டது. உங்களுக்கு என்ன சொல்லிவிட்டீர்கள் முகக்கவசம் மாட்டிக்கொண்டு இயல்பாக மூச்சு விடமுடியவில்லை,தெள...

AGE PROOF

படம்
AGE – PROOFS (Cir: U&R/138 dated 25/06/2016, NB & R/150 dated 25/11/2016, NB & R/197 dated 30/01/2019) Standard Age Proofs:- Certified extract from Municipal or other records made at the time of Birth. Certificate of Baptism or certified extract from Family Bible if it contains age or date ofbirth. School or college certificate or authenticated extract from the school or college records if the date of birth is statedtherein. Certificate extract from service Register OR identity cards (provided date of birth is mentioned therein) in caseof: Government and quasi governmentundertakings Reputed commercial institution and industrial undertakings to their employees. Provided conclusive evidence of age was produced at the time of recruitment of the employee. Identity cards issued by the Defence Department to DefencePersonnel. Marriage certificate in the case of Roman Catholics issued by Roman Catholic Church. Domicile certificate in which the date of birth stated was proved on the...

கொரானாவால் லைஃப் இன்சூரன்ஸ் துறையும் பாதிப்பு..

படம்
லைஃப் இன்சூரன்ஸ் துறையும் பாதிப்பு.. முதல் காலாண்டில் பிரிமீயம் வசூல் 19.2% சரிவு.....!வருமானம் குன்றி திக்குமுக்காடும் எல் ஐ சி முகவர்கள்....    இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர். பலர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு சாரர் வேலையிருந்தும் வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும் இருந்து வருகின்றனர். ஆக இதற்கு மத்தியில் பொருளாதாரம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்வதை யோசிப்பதாக ஒர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உண்மையில் இதற்கு சிறந்த உதாரணம் தான் தங்கம் இறக்குமதி. அரசு தங்கம் இறக்குமதியினை கட்டுப்படுத்த பலவேறு அதிரடியான நடவடிக்கையினை எடுத்து வந்தது. ஆனால் அப்போதெல்லாம் குறையாத தங்கம் இறக்குமதியானது, கொரோனாவின் காரணமாக வரலாறு காணாத அளவு சரிந்து காணப்பட்டது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக லைஃப் இன்சூரன்ஸ் துறையானது பெருத்த அடி வாங்கியுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு ஆதரமாக கடந்த முதல் காலாண்...