கொரானாவால் லைஃப் இன்சூரன்ஸ் துறையும் பாதிப்பு..
லைஃப் இன்சூரன்ஸ் துறையும் பாதிப்பு.. முதல் காலாண்டில் பிரிமீயம் வசூல் 19.2% சரிவு.....!வருமானம் குன்றி திக்குமுக்காடும் எல் ஐ சி முகவர்கள்....
இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர். பலர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு சாரர் வேலையிருந்தும் வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும் இருந்து வருகின்றனர். ஆக இதற்கு மத்தியில் பொருளாதாரம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்வதை யோசிப்பதாக ஒர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முதல் ஆண்டு பிரிமீயம் வருவாயானது ஏப்ரல் மற்றும் மே மாததில் 32.6% மற்றும் 27.9% வீழ்ச்சி கண்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் ஆண்டு பிரிமீயம் வசூலானது குறைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முதல் ஆண்டு பிரிமீயம் வசூலானது சுமார் 19 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 49,335 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 60,637 கோடி ரூபாயாக வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள SBI Life, HDFC LIFE உள்ளிட்ட தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுமார் 19.2% வீழ்ச்சி கண்டுள்ளன. இவை முந்தைய ஆண்டு 32% வளர்ச்சி கண்டு இருந்தன என்பது கூறிப் பிடத்தக்கது
நமது எல்ஐசி நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 18.5% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறியமுடிகிறது. நமது நிறுவனம் முந்தைய ஆண்டில் 81.2% வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக நமது முகவர்கள் மிகப்பெரிய வருமான இழப்பை சந்தித்துள்ளனர்.. இதை உணர்ந்து நமது நிறுவனம் எல்.ஐ.சி.ஏ.ஓ.ஐ சங்கத்தின் கோரிக்கையான முகவர்களுக்கு சராசரி ஒருமாத ரெனிவல் கமிசனை நிவாரணத்தொகையாக வழங்குவதே முகவர்களை காபாற்ற உதவும்.
திண்டுக்கல் அருகே ஒரு எல் ஐ சி முகவரும் அவருடைய துணைவியாரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற செய்தியை எளிதில் கடந்து போக முடியாது. விசாரணைக்கு பின்பு காரணம் வெளிவரும்.
பல முகவர்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளதை மறுக்கமுடியாது....
RTI யில் கூட கணக்கு வழக்கே சொல்ல முடியாது என்கிற தனியார் அமைப்பான PM Cares Fund க்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கியுள்ளது நமது நிறுவனம்
.முகவர்களை ஆணிவேர், தூண்கள் என்று பசப்பு வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுகிறது.
வருமானம் இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான முகவர்களுக்கு உதவி செய்ய நமது நிறுவனம் தொடர்ந்து மறுத்துவருகிறது. ஆனால் தனியார் அமைப்பான PM CARES க்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கி பெருமை பட்டுக்கொள்கிறது நமது நிறுவனம்.
எல்.ஐ.சி.ஏ.ஓ.ஐ முகவர்களுக்கு நிவாரணம் வழங்க நிர்வாகத்திடமும் மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நமது அகில இந்திய தலைவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா Ex MP, பொதுச்செயலாளர் தோழர் P G திலிப் ஆகியோர் நிறுவனத்தின் சேர்மென் அவர்களோடு தொலைபேசி வழியாக கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதலே பேசிவருவதை தொடர்ந்து நமது லிக்காய் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது என்பதை ஒப்புக்கொண்டார் சேர்மென்.
.வட்டியில்லா முன்பணம் எம் பி ஜி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றியது. அதன் பிறகு நிலுவையில் உள்ள கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக மே 28 அன்று நாடு தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் பிறகு நமது கோரிக்கைகளில் பிராதானமான க்ளப் மெம்பர்ஷிப்புக்கான உண்மையான ரிலாக்ஸேசனை நிர்வாகம் அறிவித்தது . இது நமது லிக்காய் சங்கத்தின் வெற்றியே....
அணைத்து முகவர்களுக்கும் ஒருமாத ரெனிவல் கமிசனை நிவாரணம் பெற தொடர்ந்து போராடி வருவது நமது லிக்காய் சங்கம் மட்டுமே....
கருத்துகள்
கருத்துரையிடுக