கொரோனா நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும்...
.
-கொரோனா நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும்
ஊரடங்கில் இருந்து வெளியே வந்து களப்பணிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டோம்
துருப்பிடித்துப்போன நம் வாகனத்திலிருந்து ஆளும்வர்கத்தின் மூளை வரை அனைத்தையும் துாய்மைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீண்ட பிரிவிற்கு பிறகு கைகொடுத்து கட்டி அனைத்து கண்ணீர் பெருக்கி அன்பை பெருக்கிக்கொள்ளும் பழைய நடைமுறைக்கு இன்னும் பல மாதங்கள் தடா போடுங்கள் காரணம் இன்னும் கொரோனா நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை
ஆகவே என்னிடமிருந்து உனக்கோ? உன்னிடம் இருந்து எனக்கோ? நம்மிடம் இருந்து நம் குடும்பத்தினருக்கோ? கொரோனாவை கொடுத்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனமும் தெளிவும் தேவை.
மின்சாரம் புழங்கும் இடத்தில் எலும்புக்கூடு படம் போட்டு தொடாதே அபாயம் என்று எழுதியிருப்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு எதையும் யாரையும் தொடாமல் இருங்கள் தவிர்க்கமுடியாமல் தொடவேண்டி வந்தால் உடனே சோப்பு போட்டு நன்றாக கைகழுவி விடுங்கள்.
முகக்கவசம் இப்போது நம் உயிர்கவசமாகிவிட்டது. உங்களுக்கு என்ன சொல்லிவிட்டீர்கள் முகக்கவசம் மாட்டிக்கொண்டு இயல்பாக மூச்சு விடமுடியவில்லை,தெளிவாக பேச்சு வரவில்லை,மூடப்பட்ட பகுதியில் அரிப்பு எடுத்துக் கொண்டே இருக்கிறது,காதுமடல் வலிக்கிறது என்று முககவசத்தை துாக்கி எறிய நுாறு காரணங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம் ஆனால் அது நம் உயிரைக்காக்கும் என்ற ஒரே காரணத்தினால் அணிய மறுக்காதீர்,மறவாதீர்.
ஒரு நாளைக்கு ஒரு முகக்கவசத்தை மட்டும் பயன்படுத்துங்கள் பயன்படுத்திய முகக்கவசத்தை முறைப்படி அழித்துவிடுங்கள் துணி மாஸ்க் மற்றும் மறுமுறை பயன்படுத்தும் முகக்கவசம் என்றால் மூக்கையும் வாயையும் நன்றாக மூடும்படியாக இருக்கட்டும்.
உங்கள் பையில் எப்போது சானிடைசர் லிக்கீயூட் சோப்பு இருக்கட்டும் வேலையை துவங்குவதற்கு முன்பாக கைகளை சுத்தம் செய்துவிடுங்கள் உங்களுக்கும் உங்கள் எதிரில் இருப்பவருடன் குறைந்தபட்சம் ஆறு அடி துாரம் இடைவெளி இருக்கட்டும்.
பொதுக்கழிப்பறைகளை உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்க்கவும், லிப்ட் பட்டன் அலுவலக கைப்பிடி போன்று பலரது கைவிரல்களும் படும் இடத்தில் உங்கள் விரல்கள் படாமல் பார்த்துக் கொள்ளவும் காரில், அலுவலகத்தில் இயற்கை காற்று வெளிச்சம் இருந்தால் அதுவே போதுமானது.கானொளி கூட்டங்களே (ஆன்லைன் மீட்டிங்குகளே) சிறந்தது
நாம் பத்திரமாக இருப்பது போல மற்றவர்களும் பத்திரமாக இருப்பதற்கு நமது அன்பும் அக்கறையும் அவசியம்.
உங்களுக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சலாகவே இருக்கலாம் ஆனால் அது மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் ஆகவே சளி இருமல் காய்ச்சல் வந்தால் அலுவலகப் பக்கமே போக வேண்டாம், மூத்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் முடியாதவர்கள் வீட்டில் இருந்தே தொலைபேசி /வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களிடம் பேசலாம்..
கைகுலுக்குவதை விட்டு வணக்கம் செலுத்தவும்,
கண்ட கண்ட நேரத்தில் காபி,டீ குடிப்பதை விட்டு கபசுர டீ குடிக்கவும்,பார்த்ததை எல்லாம் வாங்கி சாப்பிட்டு வயிற்றை குப்பைக் காடாக்கியதை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடவும் இந்த கொரோனா காலத்தில் பழகியிருந்தோம் அந்த பழக்கத்தை தொடரவும்.
மக்களின் சேமிப்பை காக்கும் படைவீரர்கள் எல் ஐ சி முகவர்கள். கடமை தவறக்கூடாது என்பதால் இந்த கொரோனா காலத்திலும் நாம் க்ளப் பணியாற்றுகிறோம். அவசர தேவைகளுக்கு பாலிசியில் கடன் பெற, புதுபிக்க, க்ளைம் பெற உதவிட நமது பணி இருக்கிறது. புது வணிகத்திற்கும் வழி தெரிகிறது.
ஆனால் நமது நிறுவனம் நமக்கு தேவையான உதவிகளை செய்ய மனமில்லாமல் இருக்கிறது.
இந்த கொடுர காலத்திலும் அராஜகமாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய எல்லாவற்றையும் செய்கிறது அரசு. ஆகவே நமது ஒற்றுமை மிகவும் கெட்டிபடவேண்டிய நேரம் இது.தனித் தனியார் சிந்தித்தது போதும் இனி மறந்துவிடாதீர்கள் ஒற்றுமையை....
இந்த கொரோனா நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும் வரை எல்லோருக்கும் தேவை ஒரு எஸ்எம்எஸ்தான்.
எஸ் என்றால் சோஷியல் டிஸ்டன்ஸ்-சமூக இடைவெளி
எம் என்றால் மாஸ்க் அணிந்திருத்தல்
எஸ் என்றால் எப்போதும் சோப் மற்றும் சானிடைசர் உபயோகிப்பது
இந்த எஸ்எம்எஸ் வாசகங்கள் நம் கண்ணில் மட்டுமல்ல அனைவர் கண்ணிலும் படும்படியாக ஒட்டிவைக்கவும்.ஒன்றுபடுவோம் கொரோனாவை விரட்டியடிப்போம்.
பங்கு சந்தையில் பட்டியலிடுவதை எதிர்த்திடுவோம்
- கி.தாமோதரன்
பொருளாளர்
LICAOI த.நா மாநிலக்குழு
சிறப்பு 👌!
பதிலளிநீக்கு