முகவான்மை பலன்கள்

நம் முகவ நண்பர்களில் சிலர் முகவாண்மை டெர்மினேஷன் என்பதை சாதாரண விசயமாக எடுத்து கொள்கின்றனர்.

சில நாட்கள் கழித்து ரீன்ஸ்டேட்  Reinstatement செய்துகொள்ளலாம். அதனால் எந்தவித இழப்பும் இல்லை என்று தவறாக எண்ணிக் கொண்டுள்ளீர்கள்.

ஒரு முகவரின் முகவாண்மை ஒரு வருடம் terminate ஆனால் அவருக்கு ஏற்படும் இழப்புகள் மிகப்பல

முதலாவது தொடர்ந்து கிடைக்கும் ரினிவல் கமிஷன் பாதிக்கப்படும்.

 முக்கியமாக கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி  வருடங்களில் நீங்கள் டெர்மினேட் ஆன வருடம் கழிக்கப்படும்

Gratuity 5 Lakhs

 LICAO சங்கம் தொடர்ந்து போராடி கிராஜுவிட்டி வரம்பை 5லட்சம் ரூபாய் என உயர்த்தியது. அதனை பெறுவதற்கு 15 வருடங்கள் உங்கள் முகவாண்மையை சரியாக செய்திருக்க வேண்டும். இடையில் நீங்கள் terminate ஆகியிருந்தால் அந்த ஆண்டில் ஈட்டிய தொடர் கமிசன் கணக்கில் எடுக்கபடாது

Group Insurance 15 லட்சம்

LICAOI சங்கம் உருவாகும் வரை முகவர்களுக்கு முறையான குருப் இன்சூரன்ஸ் இல்லை.
2007 ஆம் ஆண்டு எல் ஐ சி சேர்மென் அவர்களுடன் LICAOI சங்கம் பேச்சுவாரத்தை நடத்தியதின் விளைவே முகவர் எல்லோருக்கும் குருப் இன்சூரன்ஸ் திட்டம் முதன் முதலாக அறிமுகமானது.
 மற்றவர்களுக்கு காப்பீடு பற்றி பாடம் எடுக்கும் நாம் நமக்கான குழு காப்பீட்டினை இழக்காமல் இருக்க புது வணிகம் செய்வது முக்கியமானது. 
10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் முகவர்களுக்கு 15 லட்சம் வரை குழுக்காப்பீடு 70 வயது வரை உண்டு .

 ஒன்றிரண்டு மாதங்கள் இந்த தொழிலை செய்யாமல் விட்டாலே *வருமான பாதிப்பு மற்றும் வாய்ப்பாளர் இழப்பு ஏற்படும். மீண்டும் வருவது...அதாவது மீண்டுவருவது மிகக்கடினம்.

மேலும் உங்களுடைய முகவாண்மை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சில மாதங்களுக்குள் எல்ஐசியில் மற்றும் காப்பீட்டு துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் உங்களிடம் வந்து சேராமல் போகலாம்

 தற்போதைய காலகட்டமான, நம் காப்பீடுதுறை வளர்ந்து வரக்கூடிய காலத்தில் உங்கள் முகவாண்மை சில அற்ப காரணங்களால் நிறுத்தி வைக்கப்படுவதை தவிர்த்துவிடுங்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முகவாண்மைக்கு உரிய வணிகத்தினை செய்து  தொடர்ந்து வருமானம் பெற்றிடுங்கள்.
 இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 5 லட்சம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்புகளை இழந்து உள்ளனர்.

 அதே சமயத்தில் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வும் காப்பீடு பற்றிய விழிப்புணர்வும் பெறுமளவு அதிகரித்திருக்கிறது இவையெல்லாம் நமக்கு  காப்பீட்டுத் துறையில் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 எனவே நண்பர்களே உங்கள் முகவாண்மையில் Termination தவிர்த்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல தொடர்ந்து உழைத்திடுங்கள்.

முகவர்களின் நலனில் என்றென்றும் லிக்காய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

CLUB MEMBERSHIP

SMS FOR ENDOWMENT