Festival advance

Festival advance குறித்த பல குழப்பங்கள் தற்போது நிலவி வருகிறது இதை புரிந்துகொள்ளவே இந்த பதிவு.
ஒருவர் இரன்டு ஆண்டு ஏஜென்சி முடித்தவுடன் பண்டிகை முன்பனம் பெற தகுதியாகி விடுகிறார்.ரூ.7000/ வரை பெற முடியும் அவரே 5ஆண்டுகள் பூர்த்தி செய்திருந்தால் ரூ.10000பெற முடியும் ஆனால்  5ஆண்டுகள் நிறைவடையாத முகவர்கள்  (தொடர் ரெனிவல் கமிஷன் தகுதி இல்லாதவர்கள்)பண்டிகை முன்பணம் பெற வேண்டுமானால் surity கொடுத்து தான் பெற முடியும்.

ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பண்டிகை முன் பணம் பெற முடியும்.

வட்டியில்லாமல் இந்த கடன் தொகை வழங்கப் படுகிறது.

10 மாதாந்திர சம அளவு தொகை கமிஷனிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

      மன்ற முகவர்களாக இருப்பவர்களுக்கு cm, zm, dm தலா20000மும் bm க்கு
15000 தொகையும் வழங்கப்படும்.

கிளை மேலாளரின் தகுதி அளவில் இந்த அட்வான்ஸ் வழங்கப்படுகிறது.

12பலிசிகளும் 6லட்சம் காப்பு தொகையும் சென்ற முகவாண்மை ஆண்டில் முடித்த முகவர்கள் அட்வான்ஸ் பெற தகுதி உடையவர்கள்.

***ஆனால் புதிய முகவாண்மை விதிப்படி 6pol./50000premium, 1 லட்சம் மட்டும் பிரிமியம் முடித்தால் முகவாண்மை தொடர முடியும்.***

மேற்கண்டவாறு முகவாண்மை பூர்த்தி செய்திருந்தாலும் அட்வான்ஸ் பெற 12 பாலிசி 6லட்சம் SA என்பது கட்டாயம்.

பல கிளைகளில் மேற்கண்ட தகுதி அடிப்படையில் பலர் அட்வான்ஸ் பெற முடியாமல் உள்ளனர்.

     லிக்காய் சங்கம் MBG குறைப்புக்கு கடுமையாக போராடி வணிக இலக்கை குறைக்க சலுகை வாங்கி கொடுத்திருந்தாலும் பண்டிகை அட்வான்ஸ் பெற  
இது பொருந்தாது.இதனை கணக்கில் கொண்டு நமது அகில இந்திய பொதுச்செயளர் தோழர் திலீப் lic சேர்மெனுக்கு கடிதம் ஆகஸ்ட் மாதம் அனுப்பி இருந்தார் என்றபோதும் இன்னும் சாதகமான பதில் ஏதும் மத்திய அலுவலகத்தில் இருந்து கிடைக்காத நிலையில் நமது லிக்காய் அகில இந்திய கமிட்டி தொடர்ந்து lic க்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்பதையும் நாம் அறிய வேண்டும்.

இந்நிலையில் சென்ற ஆண்டு இந்த நிபந்தனை களை கணக்கில் கொள்ளாமல் கொடுக்கப்பட்ட பண்டிகை முன்பணம் ஆடிட்டிங் objection காரணமாக பலகிளைகளில் மீண்டும் முகவர்களிடம் ரெக்கவரி செய்யப்பட்டது நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே இந்த ஆண்டு முன்பணம் பெற 12பாலிசி 6லட்சம் சென்ற ஆண்டில் கொடுக்காத முகவர்களுக்கு ELIGIBILITY வராது.
அப்படி வலியுறுத்தி பெற்றாலும் மீண்டும் AUDITING அப்ஜெக்க்ஷன் வந்தால் ரெக்கவரி செய்யப்படும் என்பதே தற்போதுள்ள கசப்பான உண்மை.

இது தவிர ரெனிவல் கமிஷன் தகுதி என்று ஒரு விஷயமும் பார்க்கப்படுகிறது.அதன் விபரம்.
சென்ற ஆண்டின் ரெனிவல் கமிஷனை 12ஆல் வகுத்து மாதம் எவ்வளவு என்று எடுத்து அதில் உங்கள் மொத்த ரெக்கவரி மற்ற அனைத்து அட்வான்சிலும் சேர்த்து 60%க்கு மிகக்கூடாது என்பதே அது.
     அதாவது உங்களுக்கு 20000 அட்வான்ஸ் போட வேண்டுமானால் இதனை 10ஆல் வகுத்து மாதம் 2000  என்று எடுத்து க்கொண்டு அதை உங்கள் மாதாந்திர ரெனிவலில் 60% மிகாமல் சேர்க்க முடியுமா என்று பார்ப்பார்கள் .
      உதாரணத்திற்கு சென்ற ஆண்டு உங்கள் ரெனிவல்120000என்று வைத்து கொள்வோம் (மாத ரெனிவல் 10000 )இதில் உங்கள் ரெக்கவரி ஏற்கனவே 4500 மற்ற அட்வான்ஸ் களுக்காக பிடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறதென்றால் தற்போது புதிய2000 சேர்த்து ரெக்கவரி 6500 ஆக மாறும் இது 60%ஐ விட கூடுதல் எனவேகூடுதல் உள்ளத்தொகை ரூ 500×10தவணை =5000 குறைத்துக்கொண்டு 15000 தான் தகுதி வரும்(இதனால் தான் சிலருக்கு குறைவான தொகை அட்வான்சாக கிடைக்கிறது)
       மேற்க்கண்டவற்றில் எந்த மாற்றம் கொண்டு வர வேண்டுமானாலும் lic மைய அலுவலகம் விதிகளை மாற்ற வேண்டும் எனவே நமது சங்கம் மைய அலுவலகத்தில் மாற்றத்திற்கான அழுத்தம் கொடுக்கிறது.

     இதுபோன்ற பல செய்திகளையும் அடிப்படைகளையும் நம் லிக்காய் கிளை நிர்வாகிகள் புரிந்து கொண்டால் தான் நம் கோரிக்கை மற்றும் முகவர்கள் தேவையையும் பூர்த்தி செய்ய இயலும்.
நி. ராஜா
மாநில செயலர் LICAOI
தமிழ்நாடு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகவான்மை பலன்கள்

CLUB MEMBERSHIP

SMS FOR ENDOWMENT