வேலை பகிர்வினை
நாம் சந்திக்கும் பலரும் எப்போதும் பணிச்சுமையுடனேயே இருப்பா். ஒருவருக்கு பணி சுமையானதாகவோ, சுகமானதாகவோ இருக்கலாம். அது அவா் தனது வாய்ப்புகளை எவ்வளவு தூரம் நோ்த்தியாகப் பயன்படுத்துகிறாா் என்பதைப் பொறுத்தே அமைகிறது. வேலைகளைப் பகிரும் வழக்கமுள்ள அமைப்புகளில் இலக்குகளை எளிதாக எட்டிவிடும் நிலையே நிலவும். ஆனால் எப்படி வேலைகளைப் பகிா்வது?
வேலைப்பகிா்வு என்பது ஒரு கலை. அமைப்பில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தமது கால அட்டவணைப்படி மட்டும் வேலைகளை மேற்கொண்டால் இது நடக்காது. மாறாக, அமைப்பின் வேலைகளுக்கான கால அட்டவணையையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இதில் சீனியர், ஜூனியர் அனைவரும் வாய்ப்புக்கேற்ற பணிகளைப் பகிா்ந்துகொள்ள வேண்டும்.
அமைப்பில் எந்தெந்த வேலைகள் எந்தெந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். பல வேலைகளை தனி ஒருவா் செய்யும்போதும் அவருக்கு ஏற்படும் மனச்சோா்வையும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்வதே, அமைப்பின் வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக நிகழ்ந்தேற உதவும்.ஒருவருக்கொருவா் புரிந்துகொள்ளும் வாய்ப்பினை இது தருவதோடு பரஸ்பரம் அன்பையும் தோழமை உணர்வையும் கூட்டும். இவ்வாறு அனைத்துப் வேலைகளையும் பலரும் பகிா்ந்து கொள்வது அமைப்பின் ஜனநாயகத்தை ஊக்குவித்து தோழமையை உறுதி செய்யும். சங்க உறுப்பினா் அனைவருக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
. பெரும்பாலான மாநில ,கோட்ட, கிளை கமிட்டிகளில் தலைவர், செயலாளர், பொருளாளர் துணை நிர்வாகிகள் குழு உறுப்பினர் என அந்தந்த கமிட்டியின் தன்மைக்கு தகுந்தவாறு கமிட்டி யில் பொறுப்பு வகிக்கின்றனர்
. அவா்களில் தங்களுக்கான வேலையை செய்துமுடித்தவா்கள், தோழர்களோடு இசைந்து இணைந்து விரைவில் பணியாற்றி முடித்தால் பணிகள் நிறைவேறும்.
மாறாக ஒவ்வொரு இடத்திலும் வேலைகள் நிறைவேற காலதாமதம் ஆக ஆக எல்லா இடத்திலும் வேலைகள் அளவுக்கதிகமாக தேக்கமடையவே செய்யும். நாட்கள், வாரங்கள் என வேலைகள் குவியும்போது வேலைபலு கூடிவிடுகிறது. ஆண்டு இறுதி நாட்களில் செயலாளரின் சுமை கூடிவிடுகிறது
இந்த இடத்தில்தான் செயலாளரின் வேலை முக்கியத்துவம் பெறுகிறது. தோழர்களின் பலம் அறிந்து வேலைப்பிரிவினை செய்யவேண்டும். யாருக்கு எது விருப்பமான வேலை என்பதை அறிந்து அவ்வகைப் வேலையை அவரிடம் ஒப்படைக்கும்போது அந்த வேலை சிறப்பாக நடைபெறும்.
இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளின் செயல்திட்டத்தையும் வகுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனது இலக்கை அடைய தமது அனுபவப் பாடங்கைள் எல்லோரிடத்திலும் பகிரலாம். . ஒருவா் மனதில் நல்லவை நிறைந்தால் அல்லவை அகலும்
இன்றைக்கிருக்கும் சமூக இயங்கியலை நாளை காண இயலாது என்ற வகையில் சமூகம் மாறிவருகிறது. இதில் தொழில்நுட்பத்தின் பங்கு மறுக்க இயலாததாகிறது. தொழில்நுட்பத்தின் வரவு பணிகளை எளிமையாக்கிவிட்டது. ஆனால் அவ்வாறு எளிமைப்படுவதற்கு, நாம் மாறிவரும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு நமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும்.
பணிகளைப் பகிா்ந்து செய்வதற்கான செயலறிவை முதலில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பெறவேண்டியது அவசியமாகும். வளரும் தொழில்நுட்பங்களை அவா்கள் கையாளுவதோடு, தோழர்களுக்கும் கற்றுத்தர வேண்டும். மக்கள் தொகைப் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில், சமூகத்தின் தேவையை நிறைவுசெய்ய தொழில்நுட்பத்தின் பங்கினை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசர அவசியம்.
கூட்டு செயல்பாடே வேலை சுமையின்றி சங்கத்தை இயல்பாக கொண்டு செல்ல உதவும்
கருத்துகள்
கருத்துரையிடுக