எல்ஐசி யை காப்போம் ... முகவர்களை பாதுகாப்போம்

லிகாய் அமைப்பு  கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கள போராட்டங்களை நடத்தியது நாம் அறிவோம். கடந்த ஆண்டு நாடாளுமன்ற முன்பு LICAOI   தர்ணா போராட்டம் நடத்தியதை நினைவு கூர்வது நல்லது.
13 MP கள் நேரில் வந்து வாழ்த்தினர். அன்றய தினமே நாடாளுமன்றத்திலும் நமது LICAOI போராட்டம் குறித்து கேள்வி கேட்கபட்டது. அதன் பிறகு நமது ஆகில இந்திய செயல்தலைவர் தோழர் Dr. A சம்பத் தலைமையில் மத்திய நிதி அமைச்சர் திரு அருன் ஜெய்ட்லீ அவர்களிடமும் இணை அமைச்சரிடமும் LICAOI சங்கத்தின் கோரிக்கைகளை அளித்து பேசினர். கடந்த 23.ஜனவரி 2019 அன்று எல்.ஐ.சி நிர்வாத்திடமும் மும்பை யோகசேமாவில் நமது LICAOI சங்க தலைமை கோரிக்கைகளை விளக்கி பேசியது அனைவரும் அறிந்த ஒன்று.
Club mediclaim பிரச்சனையை லிகாய் சங்கம் மட்டுமே கையில் எடுத்து தீர்வுகண்டுள்ளது.
முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுருத்நி வந்தது. தற்போது
எல்.ஐ சி எல்லா முகவர்களுக்கும் வழங்கயுள்ளதை நாம் அறிவோம்..
உண்மைகளை யாரும் மறைத்திட இயலாது

எல்.ஐ.சி நிர்வாகம் நமது கோரிக்கைகள் சிலவற்றை கொள்கை அளவில் ஏற்றுள்ளதாக நமது லிகாய் சங்கம் 20/02/2019 அன்று இரவு சோசியல் மீடியாவில் அறிவித்தது.
நமது LICAOI சங்கம் அறிவித்த பல மணி நேரம் கழித்து  நமது அறிவிப்பை copy Paste &EDIT செய்து ஒருமாய தோற்றத்தை உருவாக்கிட போலி சங்கத்தினர் முயன்றனர். ஆனால் அந்த போலி அமைப்பு அம்பலபட்டு போனார்கள் .
55 ஆண்டு கால வரலாறு உள்ள அமைப்பு என மார் தட்டினால் மட்டும் போதுமா?

லிகாய் அமைப்பு தொடங்கி குறுகிய காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்ததை முகவ சமுதாயத்தின் முன் பட்டியல் இடுகிறேன்👇
குழு காப்பீடு முதன் முதலில் எல்லா முகவர்களுக்கும் 2007முதல்

மன்ற முகவர்களுக்கு மட்டுமே கிடைத்த மருத்துவ காப்பீடு அவர்களது துணைவருக்கும் பெற்று தந்தது.

.பணிக்கொடை 3லட்சமாக உயர்த்தியது.

பொன் விழா நினைவு பரிசு பெற்று தந்தது.

.அனைத்துக்கும் மேலாக முகவர்களை துச்சமாக எண்ணி செயல் பட்ட நிர்வாகம் இன்று முகவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க லிகாய் சங்கமே காரணம்...
எல் ஐ சி சேர்மென்  MD உள்ளிட்ட முழு நிர்வாகத்தோடு சரி நிகர் சமமாக உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்திய ஒரே சங்கம் LICAOI மட்டுமே...
இன்சூரன்ஸ் சட்ட திருத்தத்தில் பறிபோகவிருந்த தொடர் கமிசன்/வாரிசுரிமை கமிமசன் LIC பாலிசிகளுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் ஆகியவற்றை பாதுகாக்க இன்சூரன்ஸ் சட்டதிருத்த மசோதாவுக்கான பாராளுமன்ற தேர்வுக்குழுவில பேசி வென்றெடுத்தது LICAOI சங்கம் மட்டுமே...
IRDA முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தி IRDA வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது LICAOI மட்டுமே. முகவர்களை  பாதிப்புக்குள்ளாகாகும் பெரிஸிஸ்டென்சியை எதிர்த்து வென்றெடுக்க இப்போராட்டம் மட்டுமே காரணம். 1லட்சம் பிரிமியம் 12பாலிசி கட்டாயம் என்கிற
MBG விதியை  மாற்றி அமைத்தது LICAOI மட்டுமே.
இன்னமும் வரிசை படுத்தி கொண்டே செல்லலாம் லிகாய் அமைப்பு குறுகிய காலத்தில் வென்றெடுத்ததை.........
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவது அகில இந்திய அளவில் இயங்கும் லிகாய் அமைப்பு மட்டுமே. இது பற்றிய செய்திகளை ஆதாரத்துடன்  முன்னரே பதிவு செய்துள்ளோம்்.
உண்மை நம் கண் முன் உள்ளது. LICAOI சங்கம் முகவர்களை பாதுகாக்க எல்ஐசி யை காக்க ஏவுகணையாய் புறபட்ட பேரியக்கம். நாடு முழுவதும்  எல்லா மண்டலங்களிலும் செயல்படும் பேரியக்கம் LICAOI சங்கம் மட்டுமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகவான்மை பலன்கள்

CLUB MEMBERSHIP

SMS FOR ENDOWMENT