சிகரம் தொடு
சிகரம் தொடு..
-------------------
ஏங்க உங்க நிதி திட்டம் பற்றி
பேசுவோமா என்று 20 வயது நபரிடம்
கேட்டால், "இப்ப என்னங்க அவசரம்,
20 வயசுதானே ஆகுது, கொஞ்சம் போகட்டுமே" என்பார்.
சரி 60 வயது ஆளிடம் கேட்டால்
இனிமேல் என்னத்துக்கு திட்டம்?
எல்லாம் முடிஞ்சு போச்சே என்பார்.
சரி 40 வயது ஆளிடம் கேட்டால்
வாங்குறது கைக்கும், வாய்க்குமே
சரியா இருக்கு, இப்ப முடியாதே
என்பார்.
எப்ப தான் உங்க திட்டம்?
கொஞ்ச நாள் கழிச்சு போடற
சிறந்த திட்டத்தைவிட, இன்று
போடும் திட்டம் சிறந்தது.
வாழ்க்கையின்( சம்பாதிக்க தொடங்கும்)
ஆரம்பத்திலேயே திட்டம் போடுவதே
சிறந்த நிதி திட்டமாகும்.ஆங்கிலத்தில்
SIP, systematic investment plan.
சீரான முதலீட்டுத் திட்டம். ஒரு தவணையோடு முடிப்பதல்ல.
எப்படி உடல் சக்திபெற ஒருநாள்
மூன்று வேளை, நேரத்திற்கு
உணவு உட்கொள்ளுகிறோமோ,
அதைப்போல்.பசி என்று ஒரே
நேரத்தில் விழுங்க முடியுமா?
ரொம்ப யோசிக்காதீங்க நிதி திட்டமிட..
செலவு பண்ண தயங்க வேண்டும்.
ஆனால் அப்போ யோசிக்காம,
கடன் வாங்கியாவது செலவழிக்கிறோம்.
எது நல்ல நேரம்? என்று என்னிடம் கேட்டால், இப்ப, இன்று, இந்த நேரம்
நல்ல நேரமே..
சேர்த்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா,
அம்மா கையில கொடுத்துப்போடு
செல்லக்கண்ணு. அவங்க ஆறை
நூறா ஆக்குவாங்க சின்னக்கண்ணு.
இங்கு அம்மா யார், எவர், எந்த நிறுவனம்
என்று தீர்மானம் பண்ணி ஆரம்பிங்க.
பணம் பெருகட்டும்..
வெற்றி நிச்சயம்
வி.சு
கருத்துகள்
கருத்துரையிடுக