முகவான்மை பலன்கள்

நம் முகவ நண்பர்களில் சிலர் முகவாண்மை டெர்மினேஷன் என்பதை சாதாரண விசயமாக எடுத்து கொள்கின்றனர். சில நாட்கள் கழித்து ரீன்ஸ்டேட் Reinstatement செய்துகொள்ளலாம். அதனால் எந்தவித இழப்பும் இல்லை என்று தவறாக எண்ணிக் கொண்டுள்ளீர்கள். ஒரு முகவரின் முகவாண்மை ஒரு வருடம் terminate ஆனால் அவருக்கு ஏற்படும் இழப்புகள் மிகப்பல முதலாவது தொடர்ந்து கிடைக்கும் ரினிவல் கமிஷன் பாதிக்கப்படும். முக்கியமாக கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி வருடங்களில் நீங்கள் டெர்மினேட் ஆன வருடம் கழிக்கப்படும் Gratuity 5 Lakhs LICAO சங்கம் தொடர்ந்து போராடி கிராஜுவிட்டி வரம்பை 5லட்சம் ரூபாய் என உயர்த்தியது. அதனை பெறுவதற்கு 15 வருடங்கள் உங்கள் முகவாண்மையை சரியாக செய்திருக்க வேண்டும். இடையில் நீங்கள் terminate ஆகியிருந்தால் அந்த ஆண்டில் ஈட்டிய தொடர் கமிசன் கணக்கில் எடுக்கபடாது Group Insurance 15 லட்சம் LICAOI சங்கம் உருவாகும் வரை முகவர்களுக்கு முறையான குருப் இன்சூரன்ஸ் இல்லை. 2007 ஆம் ஆண்டு எல் ஐ சி சேர்மென் அவர்களுடன் LICAOI சங்கம் பேச்சுவாரத்தை நடத்தியதின் விளைவே முகவர் எல்லோருக்கும் குருப் இன்சூரன்ஸ்...