இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேலை பகிர்வினை

படம்
நாம் சந்திக்கும் பலரும் எப்போதும் பணிச்சுமையுடனேயே இருப்பா். ஒருவருக்கு பணி சுமையானதாகவோ, சுகமானதாகவோ இருக்கலாம். அது அவா் தனது வாய்ப்புகளை எவ்வளவு தூரம் நோ்த்தியாகப் பயன்படுத்துகிறாா் என்பதைப் பொறுத்தே அமைகிறது. வேலைகளைப் பகிரும் வழக்கமுள்ள அமைப்புகளில் இலக்குகளை எளிதாக எட்டிவிடும் நிலையே நிலவும். ஆனால் எப்படி வேலைகளைப் பகிா்வது? வேலைப்பகிா்வு என்பது ஒரு கலை. அமைப்பில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தமது கால அட்டவணைப்படி மட்டும் வேலைகளை மேற்கொண்டால் இது நடக்காது. மாறாக, அமைப்பின் வேலைகளுக்கான கால அட்டவணையையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இதில் சீனியர், ஜூனியர் அனைவரும் வாய்ப்புக்கேற்ற பணிகளைப் பகிா்ந்துகொள்ள வேண்டும். அமைப்பில் எந்தெந்த வேலைகள் எந்தெந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். பல வேலைகளை தனி ஒருவா் செய்யும்போதும் அவருக்கு ஏற்படும் மனச்சோா்வையும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்வதே, அமைப்பின் வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக நிகழ்ந்தேற உதவும்.ஒருவருக்கொருவா் புரிந்துகொள்ளும் வாய்ப்பினை இது தருவதோடு பரஸ்பரம் அன்பையும் தோழமை உ...