GST வரியும் CAG அறிக்கையும்
இரமணன் எல் ஐ சி அதிகாரி மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான கயிறு இழுக்கும் போட்டியின் பின் புலத்தில் சி.ஏ.ஜி அறிக்கை கூடுதல் அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளதே! மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் நடப்பதை கயிறு இழுப்பு போட்டி என்று சொல்ல முடியாது. போட்டியெனில் இரு பக்கத்திற்கும் சம நிலை இருப்பது போட்டியின் விதிகளில் உறுதி செய்யப்படும். ஆனால் இதுவோ *பாதாளத்திற்குள் தள்ளி விடப்பட்ட மாநிலங்கள் ஏதோ கிடைக்கிற கயிறைப் பிடித்து தத்தளித்து மேலே ஏற முனைகிற நிலை.* மத்திய அரசால் காப்பாற்றுவதற்காக என்று கூறி வீசப்படுகிற கயிறு பலவீனமாய் இருப்பதே கூடுதல் ஆபத்து. இப்போது விசயத்திற்கு வருவோம். நெருக்கடியை மாநிலங்கள் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் மத்திய அரசின் போக்கை தனியாக நாம் விவாதிக்க வேண்டும். இங்கு அடிப்படை முறைமையிலேயே உள்ள ஓர வஞ்சனை, அசமத்துவத்தை பகிர்ந்து கொள்ளலாம். சி.ஏ.ஜி அறிக்கையும் இந்த உள்ளார்ந்த பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி திட்டம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியது. அத்தியாவசிய பண...