வருமான வரிக் கணக்கு தாக்கலில் இனி கவனம் அவசியம்

வரிக் கணக்கு தாக்கலில் இனி கவனம் அவசியம்! - *முகமறியா மதிப்பீடு..!* பி.பி.எஃப் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரிலும் செலுத்தலாம். ஆனால், மனைவி சம்பாதிப்பவராக இருக்கக்கூடாது. பிரீமியம் ஸ்டோரி நம்மில் சிலர் நினைப்பதுபோல, முகமறியா வருமான வரி மதிப்பீடு என்பது ‘புதிய பானையில் பழைய சோறு’ அல்ல... வரி செலுத்துவதிலிருந்து ஒருவர்கூட இனி தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக இந்தப் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. விளைவு, இனி வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் நாம் கவனமாக இல்லாவிட்டால், வரி ஏய்ப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கும். முகமறியா மதிப்பீடு என்ற இந்தப் புதியமுறையை மத்திய அரசாங்கம் இப்போது ஏன் கொண்டுவந்துள்ளது என்ற காரணத்தை நாம் புரிந்துகொண்டால், இதன் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர முடியும். வரிக் கணக்கு தாக்கலில் இனி கவனம் அவசியம்! - முகமறியா மதிப்பீடு..! கடந்துவந்த பாதை! ‘நியாயமாகச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துங்கள்’ என வருமான வரித்துறை தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துப் பார்த்தது. ஆனால், யாரும் அதைக் கேட்கிற மாதிரி இல்லை. விளைவு, கடந்த ஆகஸ்ட் 14, 2020 முதல் முகமறியா மத...