கொரோனா நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும்...

. - கொரோனா நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும் ஊரடங்கில் இருந்து வெளியே வந்து களப்பணிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டோம் துருப்பிடித்துப்போன நம் வாகனத்திலிருந்து ஆளும்வர்கத்தின் மூளை வரை அனைத்தையும் துாய்மைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீண்ட பிரிவிற்கு பிறகு கைகொடுத்து கட்டி அனைத்து கண்ணீர் பெருக்கி அன்பை பெருக்கிக்கொள்ளும் பழைய நடைமுறைக்கு இன்னும் பல மாதங்கள் தடா போடுங்கள் காரணம் இன்னும் கொரோனா நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை ஆகவே என்னிடமிருந்து உனக்கோ? உன்னிடம் இருந்து எனக்கோ? நம்மிடம் இருந்து நம் குடும்பத்தினருக்கோ? கொரோனாவை கொடுத்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனமும் தெளிவும் தேவை. மின்சாரம் புழங்கும் இடத்தில் எலும்புக்கூடு படம் போட்டு தொடாதே அபாயம் என்று எழுதியிருப்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு எதையும் யாரையும் தொடாமல் இருங்கள் தவிர்க்கமுடியாமல் தொடவேண்டி வந்தால் உடனே சோப்பு போட்டு நன்றாக கைகழுவி விடுங்கள். முகக்கவசம் இப்போது நம் உயிர்கவசமாகிவிட்டது. உங்களுக்கு என்ன சொல்லிவிட்டீர்கள் முகக்கவசம் மாட்டிக்கொண்டு இயல்பாக மூச்சு விடமுடியவில்லை,தெள...