உங்கள் டேட்டா உங்கள் கையில்

டேட்டாவை சேமிக்க சில வழிகள்! தினமும் 1 ஜிபி, 1.5 ஜிபி, 2 ஜிபி என்று பல கட்டணத் திட்டங்களை அலைபேசி நிறுவனங்கள் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன. வரம்பற்ற டேட்டா பயன்பாடு என்று சொல்லப்பட்டாலும் திட்டத்திற்கேற்ப குறிப்பிட்ட வரம்பைத் தாண்டியதும் நத்தை வேகத்திற்கு மாறிவிடுகிறது. பெரு நகரங்களைத் தவிர்த்து பல கிராமப் புறப் பகுதிகளில் டேட்டா இருப்பு இருந்தாலும் வேகம் என்னவோ ஆமைக்கும் நத்தைக்குமான போட்டிதான். இது ஒருபுறம் இருக்க, எல்லாம் சரியாக இருக்கும் சிலருக்கு பகலிலேயே மொத்த டேட்டாவும் காணாமல் போகிறது. என்ன நடந்தது, என்ன செய்தோம் என்று யோசித்து முடிப்பதற்குள் அந்த நாள் கடந்து விடுகிறது. இது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் டேட்டாவை சேமிக்க உங்கள் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் செயல்பாடு மற்றும் போன் அமைப்புகளில் மாற்றம் செய்து வீணாகும் டேட்டாவை சேமிக்கலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம். பின்புல டேட்டா இழப்பைத் தடுக்க ஆண்ட்ராய்ட் போன்களில் பின்புல டேட்டா பரிமாற்றத்தைத் தடுப்பதன் மூலம் அதிக அளவு டேட்டா பரிமாற்றத்தை தடுக்கலாம். இது உங்களுக்கு அதிக அளவு டேட்டா சேமிப்பை வழங்கக் கூடும். இதனை செயல்படுத்த உங்கள் ...