வெற்றி பாதையில் தான் செல்கிறீர்களா ! 🍭 நாம் ஒரு வாய்ப்பாளரிடம் வாய்ப்பை பெறுவதற்கு என்ன என்னமோ செய்கிறோம். ஆனால் நாம் செய்யும் அனைத்தும், பாலிசி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறதா என்று ஒரு நிமிடம் சிந்தித்து இருக்கிறோமா? இல்லையெனில் நாம் சிந்தித்து பார்ப்பதற்கான சரியான தருணம் இதுதான். 🍭 நாம் அனைவருக்கும் அதிக பாலிசிகளை விற்று அதிக கமிசன் ஈட்டவேண்டும் , MDRT, TOT, CO , அல்லதுClub member ஆக வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும் ஆனால் நாம் அந்த இலட்சியத்தை நோக்கித்தான் செல்லுகிறோமா என்று நினைத்து பாருங்கள். 🍭 சில சமயங்களில் நமது இலட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால் அதில் நமக்கு வெற்றி கிடைக்காமல் போயிருக்கும். எனவே அந்த இலட்சியத்தை கைவிடுவது நல்லதா? 🍭 நமக்கு ஏற்பட்ட சில தோல்விகளால் நமது இலட்சியத்தை விட்டுவிட்டு, கிடைக்கும் சிறு வெற்றியை ஏற்றுக் கொண்டால் அது நமக்கு திருப்திகரமாக அமையுமா? நிச்சயம் அமையாது. 🍭 நமது முகவாண்மை பனியில்் கவனம் செலுத்த முடியாமல் நமது இலட்சியத்தை அடையவும் முடியாமல் நமது வாழ்க்கையே நரகமாக மாறிவிடும். 🍭 எனவே நமது இலட்சியத்தை...