இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முருங்கை

படம்
அமெரிக்காவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய குட்டி நாடு என்று சொல்லப்படும் கியூபாவின் தலைசிறந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து முருங்கையை வரவழைத்து தனது தோட்டத்தில் தானே வளர்த்தார். அதை பெருக்கி தன் தேசமெங்கும் நட்டு வளரச்செய்தார். 'கியூபாவில் இருக்கும் எல்லோரும் வீட்டுக்கொரு முருங்கை மரம் வளருங்கள்!' என்று அறிவித்தார் என்று கியூபாவின் அதிகாரப் பூர்வ தரவுகள் சொல்கின்றன. முருங்கையில் அத்தனை நோய் எதிர்ப்பு சத்து இருப்பதே அவரது அந்த செயல்பாடுகளுக்கு காரணம்.  உடல் சூட்டைத் தணிக்கிறது, உடலுக்கு வலு சேர்க்கிறது, முடி உதிர்வை தடுக்கிறது, ரத்த சோகையை நீக்குகிறது (இரும்பு!), சுவாசக்கோளாறு சளி பிரச்சினைகள் நீங்கும், ஆஸ்த்துமா, மலட்டுத்தன்மை நீங்கும் என என்னென்னவோ சொல்லும் பெரிய பட்டியல் ஒன்று உள்ளது முருங்கைக்கீரைக்கு.   நோய் எதிர்ப்பு சத்து கூட்டும் என்பதே போதுமே முருங்கையை நாம் ஏன் உண்ண வேண்டும் என்று சொல்ல.  'பரமன்... எங்க பரமன், முருங்கைய கீரையா கடைஞ்சா பசங்க தொடக்கூட மாட்டேங்கறாங்க. கீரையை பெரட்டி தாளிச...